பதிவு செய்த நாள்
28
ஆக
2023
01:08
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நான்காம் ஆண்டு, நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழா நேற்று, கனக சபை மண்டபத்தில் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, நால்வர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார். தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஓதுவார்கள், பன்னிரு திருமுறைகள் பாடி அர்ப்பணித்தனர். மாலை, 4:00 மணிக்கு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர், ரத வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா, 65க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.