கரும்பலகையில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய மாணவருக்கு கிடைத்த பரிசு ’அடி’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 05:08
ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் ஜெய் ஸ்ரீராம் என எழுதினார் இதனை கண்டித்த ஆசிரியர் மாணவனை அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநில் கதுவா மாவட்டத்தில் உள்ளது அரசு பள்ளி இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஒருவர் தன்னுடைய வகுப்பறை கரும்பலகையில் ஜெய்ஸ்ரீராம் என எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்ட ஆசியர் முகமது பரூக் மாணவரை அடித்து காயப்படுத்தி உள்ளார். இதனையடுத்து மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து துணை கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில் கதுவாவில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பானி துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் கதுவா துணை முதன்மைக்கல்வி அதிகாரி மற்றும் காரோட் அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்துவர் என தெரிவித்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உ.பி.,மாநிலம் முசாபர்நகரில் ஆசிரியை ஒருவர் மத அடையாளத்தின் அடிப்படையில் அப்பாவி மாணவரை தாக்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் தற்போது மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.