சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2023 06:08
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினார். மதியம் 12:00 மணி வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.