கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கடம்பூரான், காமாட்சி அம்மனுக்கு முப்பூஜை விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை தென் கீரனுார் கோமுகி நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்தல் வைபவம் நடந்தது. இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணிக்கு கடம்பூரான், காமாட்சி அம்மனுக்கு முளைபாரி எடுத்து, ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று இரவு 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை நீலமங்கலம் கிராமமக்கள் செய்திருந்தனர்.