Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மனுக்கு ... முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி ஊர்வலம் முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் முக்தி அடைந்தார்
எழுத்தின் அளவு:
பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் முக்தி அடைந்தார்

பதிவு செய்த நாள்

31 ஆக
2023
01:08

திருக்கோவிலூர்: பக்தர்களால் பிரேமி அண்ணா எனவும், பிரேமி சுவாமிகள் எனவும் ஸ்ரீ அண்ணா எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், நேற்று இரவு 2 மணிக்கு முக்தி அடைந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளை அடைந்தார். அவரது வயது 89.

பிரேமி சுவாமிகள், நாம சங்கீர்த்தனம் மூலம் பக்தர்களை ஒருங்கிணைத்து அக்ரஹாரம் தோறும் 50 ஆண்டுகளாக, பக்திகளை வளர்த்தார். இவர் எந்த ஊர் சென்றாலும், அவருக்காவும், அவரது சொற்பொழிவை கேட்கவும், ஒரு கூட்டம் கூடும். விசாக அரி என்ற பிரபலமான பக்தி சொற்பொழிவாளர் இவரது மருமகள். கடந்த சில நாட்களாக வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சென்னையில், நேற்று இரவு 2 மணிக்கு, முக்தி அடைந்தார். இச்செய்தியறிந்து அவரது பக்தர்கள் மீளாதுயர் அடைந்துள்ளனர்.

வாழ்க்கை வரலாறு: ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சங்கநல்லூரில் ஒரு சிறிய கிராமத்தில் 1934ம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப காலம் முதல், யோக சாதனங்களில் தீவிர பயிற்சியாளராக இருந்த இவர், இறைவனின் தாமரை பாதங்களை அடைவதற்கான எளிதான வழி, பக்தியின் பாதை என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினார். அவர் ஸ்ரீ பகவான் நாம போதேந்திராளை தனது மானசீக குருவாகப் போற்றினார். அவர் ஸ்ரீமத் பாகவதத்தை தனது பிரமாண கிரந்தமாக எடுத்துக் கொண்டார். அவர் பிரேமிகா சம்பிரதாயா என்ற புகழ்பெற்ற சம்பிரதாயத்தை நிறுவி உள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வமாக வழிபட்ட அவர், பரனூரில் கிருஷ்ணருக்கு அற்புதமான கோவிலை கட்டி உள்ளார். அங்கேயே வாழ துவங்கிய பிரேமி சுவாமிகள், காலையில் சுப்ரபாதம் தொடங்கி, மதியம் பூஜை, இரவு டோலோத்ஸவம் வரை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து சேவைகளையும் அவரே செய்தார். ஸ்ரீ கிருஷ்ணரின் சேவைக்காக உத்ஸவ கிருதிகளை இயற்றி உள்ளார். அந்த கீர்த்தனைகள் தான், பரனூரில் இறைவனின் பூஜையின் போது பாடப்பட்டு வருகின்றன. இது தவிர ராகவ ஷதகம், ராதிகா ஷதகம், யுகல ஷதகம், கோவிந்த ஷதகம், ரங்க ஷதகம் போன்ற பல ஷதகங்களை இயற்றியுள்ளார். இந்த ஒவ்வொரு ஷதகத்திலும், 100 கிருதிகள் உள்ளன. அவர் இதுவரை 1000 கிருதிகளுக்கு மேல் இயற்றியுள்ளார்.

இந்தியா முழுவதும் பக்தி பரவல்: இந்திய மக்களின் மனதில் பக்தியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப, கன்னியாகுமரி முதல் இமயமலை வரை இந்தியா முழுவதும் பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம், பகவத் கீதை, ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீமத் பாகவதம், உபநிடதங்கள் போன்ற பல தலைப்புகளில், பல நகரங்களில் சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார். அறிவின் கடலாகவும், ஞானத்தின் தேக்கமாகவும் இருந்த அவர், பேசாத தலைப்பு இல்லை எனலாம். பிரேமி சுவாமிகள், இந்தியா முழுவதும் பல நகரங்களில் ‘அகில பாரத சாது சங்கம்‘ என்ற சங்கத்தை நிறுவி உள்ளார். இச்சங்கம் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, திருநெல்வேலி, மதுரை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் செயல்படுகிறது. உ.பி., மாநிலம் மதுரா, கர்நாடக மாநிலம் மேல்கோட், மதுரை அழகர் கோவில், திருச்சநல்லூரில் ஆசிரமங்களை நிறுவி உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
போடி; பவுர்ணமியை முன்னிட்டு போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar