Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கருப்பண்ணசாமி ... துடியலூர் அரவான் கோவிலில் கும்பாபிஷேகம் துடியலூர் அரவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகுவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகுவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

04 செப்
2023
04:09

கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் ஆவணி பொங்கல் மற்றும் முளைப்பாரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் மஞ்சள் நீர் சுமந்து கொடிமரத்தில் ஏற்றப்பட வேண்டிய அம்மன் உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. மூலவரான அழகுவள்ளி அம்மன் மற்றும் கொடிமரத்திற்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. கொடிமரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை, அபிஷேகம் நடைபெறும்.செப்., 13ல் பால்குடம், அக்கினிசட்டி,பூக்குழி, வேல் குத்துதல்,சாக்குவேடம், சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராமமக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar