தொழுகையை பற்றி நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல், இரவு நேர வானவர்கள் அதிகாலை, மாலை பொழுது தொழுகையில் ஒன்று கூடுகிறார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் அவர்கள் இறைவனிடம் செல்லும்போது, ‘‘நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்’’ என்று அவன் கேட்பான். அதற்கு அவர்கள், ‘‘உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். அவர்களை விட்டுவரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே இருந்தனர்’’ என்பார்கள்.