அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தனக்கு இருந்த உணவைக் கூட மற்றவர்களுக்கு கொடுத்து உதவினார் நபிகள் நாயகம். “இறையருளால் பெறும் இன்பம் பணத்தால் பெறும் இன்பத்தை விட சிறந்தது. பிறருக்கு கொடுப்பவன் இறைவனுக்கே கடன் தருகிறான். தர்மம் செய்பவனுக்கு அதன் பயன் இரு மடங்காக கிடைக்கும். செய்கின்ற தானத்தை கைம்மாறு கருதாமல் செய்ய வேண்டும். உழைத்து தேடிய பணம் குறைவாக இருந்தாலும், முடிந்ததை மறுக்காமல் கொடுப்பவனே சிறந்தவன். தானம் அளிக்கும் போது முதலில் இறைவனின் கைக்குச் சென்ற பின்னரே அது ஏழையின் கைக்குச் செல்கிறது” என்கிறார்.