பேச்சாளர்கள் மக்களைக் கவர தங்களின் பேச்சுத்திறனை வெளிப்படுத்துவர். வார்த்தை அலங்காரத்தில் ஏமாற்றுவர். இதனால் சொல்ல வந்த கருத்து அடிபட்டு போகும். கருத்துக்களை புறக்கணித்து வெறும் சொல் அலங்காரத்தில் மூழ்கி விட்டு பின்னர் துன்பத்திற்கு ஆளாவர். தற்காலத்தில் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் மக்கள் மயங்குகின்றனர். இந்த அறிவுரையை பின்பற்றினால் தப்பிக்கலாம்.