பதிவு செய்த நாள்
05
செப்
2023
02:09
புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9,10ம் தேதி நடைபெற உள்ள ஜி-20 மாநாடு அரங்கத்தின் முகப்பில், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
டில்லி, பிரகதி மைதானத்தில், அடுத்த மாதம் 9,10 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடக்கிறது. மாநாட்டு நடைபெறும் அரங்கத்தின் முகப்பில் அமைப்பதற்காக, மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆப் ஆர்ட் சார்பில், சோழர் கால நடராஜர் சிலையை வடிவமைத்துள்ளது. செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், இரும்பு, பாதரசம் உள்ளிட்ட அஷ்ட(எட்டு) தாதுக்களால் உருவாக்கப்பட்டதால் சிலை கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. இச்சிலை 28 அடி உயரத்தில், 21 அடி அகலத்திலும், சுமார் 25 ஆயிரம் கிலோ எடையில், 51 தீட்சுடர்கள் திருவாச்சியில் இடம் பெற்றுள்ளது. உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.