ஆவணி செவ்வாய்; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2023 03:09
கோவை: டவுன்ஹால் அருகே என்.ஹெச். ரோட்டில் இருக்கும் மாகாளியம்மன் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மஞ்சள் நிற வஸ்திரத்தில், புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.