Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் லட்டு ... ஜி - 20 மாநாடு பாரத் மண்டபத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை ; பிரதமர் பெருமிதம் ஜி - 20 மாநாடு பாரத் மண்டபத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் 5வது சிறுத்தை சிக்கியது; தடியுடன் செல்லும் பாத யாத்திரை பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் 5வது சிறுத்தை சிக்கியது; தடியுடன் செல்லும் பாத யாத்திரை பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 செப்
2023
12:09

திருப்பதி: ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய அண்மையில் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி இறந்தார். இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். ஆகஸ்ட் 28 தேதி திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4வது சிறுத்தை சிக்கியது. இந்நிலையில் இன்று 5வது சிறுத்தை சிக்கியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கைகளில் தடி; திருமலைக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கைகளில் தடி கொடுத்தனுப்பும் பணியை நேற்று தேவஸ்தானம் துவங்கியது. திருமலை மலைப்பாதையில் கடந்த மாதம் சிறுமி, சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, திருமலைக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் கையில் தடியை கொடுத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்த வழியை தேவஸ்தானம் மேற்கொண்டது. நடைபாதையில் செல்லும் 30,000 பக்தர்களுக்கும் தடியை தயார் செய்த பின், இந்த பணியை துவங்க முடிவு செய்யப்பட்டது. தடிகள் தயார் செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் சென்ற பக்தர்களுக்கு தடிகள் வழங்கப்பட்டன. அலிபிரியில் தடிகள் பெற்றுக் கொள்ளும் பக்தர்கள், திருமலைக்கு சென்ற பின், அந்த தடியை ஊழியர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar