குதிரை வாகனத்தில் பாதூர் ஐய்யனார் சுவாமி ; ஆயிரகணக்கானோர் மத்தியில் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 05:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் ஆயிரகணக்கானோர் மத்தியில் உற்சவம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. இத்திருவிழாவின் இரண்டாம் நாளில் இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனை வழிபாடுகளும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இத்திருவிழா நடக்கும் நாட்களில் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 10 மணி முதல் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தது. பின்னர் ஏரிக்குள் அமைந்துள்ள கோவில் மண்டபத்தை வலம் வந்து கோவிலை சென்றடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் குதிரை, ஐயனார் சிலைகளை செய்து வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.