பதிவு செய்த நாள்
17
செப்
2023
04:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் உற்சவர்கள் புறப்பாட்டிற்கு புதிய வாகளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் கார்த்திகை மாதம் வருடாஷேகம், மார்கழியில் அனுமன் ஜெயந்தி, பங்குனியில் ராம நவமி விழாக்கள் நடக்கிறது. விழாவில் உற்சவர்கள் பட்டாபிஷேக ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் புறப்பாட்டிற்காக வெள்ளி கருடன், தாமிரத்தால் ஆன ஆஞ்சநேயர், குதிரை, சேஷம், அன்னம், யானை, ஒட்டகம் வாகனங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு திருவிழாவிற்கு தயாராக உள்ளன.