Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருள்புரிவாய் ஆனைமுகா.. விநாயகர் ... வினை தீர்ப்பான் விநாயகன்.. பாரதம் தந்த பரம்பொருளை வழிபடுவோம்; விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் வினை தீர்ப்பான் விநாயகன்.. பாரதம் ...
முதல் பக்கம் » துளிகள்
விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வழிபடுங்க.. சகல வளங்களும் கைகூடும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வழிபடுங்க.. சகல வளங்களும் கைகூடும்!

பதிவு செய்த நாள்

17 செப்
2023
04:09

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

திதிக்குரிய கணபதி: பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்குமே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறப்பு பலன் தரும் என்பர்.

பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி-துவிஜ கணபதி; சப்தமி-சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி-ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கணபதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி-விஜய கணபதி; அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar