பதிவு செய்த நாள்
13
அக்
2012
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 79 லட்ச ரூபாயை, பக்தர்கள், உண்டியலில் கணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இரு நாட்கள், கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, முன்னிலையில், காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், உண்டியல் காணிக்கையாக, 79 லட்சத்து, 37ஆயிரமும், 108 கிராம் தங்க நகைகளும், 515 கிராம் வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.