பதிவு செய்த நாள்
13
அக்
2012
10:10
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "அடுத்த ஆண்டு, செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் விதத்தில், திருப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கோவில் திருப்பணிகள் அனைத்தையும், உபயதாரர்களே ஏற்றுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஸ்ரீமத்சிதம்பர சுவாமிகள் மடம், 50 லட்சம் ரூபாயில் சீரமைத்தல், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் விடுதிகள் கட்டுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. கோவில் திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர், 044-2744 6226 எண்ணில் தொடர்பு கொண்டு, நன்கொடை தரலாம், என்றார்.