பதிவு செய்த நாள்
13
அக்
2012
10:10
நெகமம்: கோவை மாவட்டம், செட்டியக்காபாளையத்தில், மழை வேண்டி, விநாயகர் சிலைக்கு, ஆயிரத்து எட்டு குடம் தண்ணீர் ஊற்றி, பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பருவமழை பொய்த்து விட்டதால், இப்பகுதி மக்கள், குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல், கடும் அவதிப்படுகின்றனர். இதனால், மழை வேண்டி, கடந்த, 7ம் தேதி, செட்டியக்காபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், வீடு வீடாகச் சென்று, மழை சோறு வாங்கி, அங்குள்ள விநாயகர் சிலைக்கு படையல் இட்டனர். இதனால், கடந்த 9ம் தேதி, தூறல் மழை பெய்தது. தொடர்ந்து, பலத்த மழை பெய்ய வேண்டும் என, நேற்று முன்தினம் இரவு, 1,008 குடங்களில், தண்ணீர் எடுத்து வந்த பொதுமக்கள், பழனியாண்டவர் கோவில் முன் மண்டபத்தில் உள்ள, தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும் என்பதற்காக, முகம் தெரியும் அளவுக்கு, களிமண்ணால் சுவர் எழுப்பப்பட்ட, மூத்த விநாயகர் சிலைக்கு, 1,008 குடம் தண்ணீர் ஊற்றி, வழிபாடு செய்தனர்.