புரட்டாசி முதல் செவ்வாய்; கோவை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2023 06:09
கோவை : கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.