ஏழுமலையானுக்கு சாற்ற ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை திருப்பதி சென்றது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2023 05:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோற்ஸவத்தின் 5ம் திருநாளில் திருமலை ஏழுமலையான் சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று மதியம் 1:30 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பிரமாண்ட மாலை சாற்றப்பட்டு, ரகு பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட மாலை, கிளி, பரிவட்டங்கள் ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரீவாஸ், கோயில் பட்டர்கள் மாட வீதிகள் சுற்றி வந்தனர். பின்னர் ஒரு காரின் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மாலை (செப்.22) ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் ராம்குமார், உமாராணி, நளாயினி, செயல் அலுவலர் முத்துராஜா, ராம்கோ அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவரும், ராம்கோ சேர்மனுமான வெங்கட் ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.