துடியலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்; சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2023 06:09
துடியலூர்: துடியலூரில் பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இன்று மாலை விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் இருந்து, துடியலூரில் உள்ள வெள்ளக்கிணறு குளத்தில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. சிலைகளை கரைக்க வெள்ளக் கிணறு குளத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விநாயகர் சிலைகளை வாங்கி, குளத்தில் கரைத்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை துடியலூர் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.