பதிவு செய்த நாள்
20
செப்
2023
06:09
கோத்தகிரி: கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில், 158 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில், இந்துமுன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, 158 சிலைகள் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூஜிக்கப்பட்ட சிலைகள், நேற்று பகல் டானிங்டன் பகுதியில் இருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். கோவை கோட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், ஓம் கணபதி ஜெய் கணபதி, ஓம் காளி ஜெய காளி என, கோஷம் எழுப்பிய தொண்டர்கள், தாரைத்தப்பட்டம் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். இதில், இந்துமுன்னணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.