புரட்டாசி வெள்ளி; முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2023 04:09
கோவை; ராம் நகர், வி. என். தோட்டம், முத்துமாரியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர்.