பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2023 09:09
மயிலாடுதுறை : பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் திருத்தேர் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது. ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து. தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்களில் வாசலில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.