தமிழகத்திலேயே முதலாவதாக தெரசாவிற்கு சர்ச் ; சிவகங்கையில் நாளை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2023 11:09
சிவகங்கை : புனிதர் பட்டம் பெற்ற தெரசாவிற்கு தமிழகத்தில் முதன் முறையாக சிவகங்கை மாவட்டம், வல்லனியில் சர்ச் கட்டி நாளை திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முதன் முதலாக சிவகங்கை அருகே வல்லனி கிராமத்தில் தெரசாவிற்கு சர்ச் கட்ட 2019 செப்.,15ல் முன்னாள் முதன்மை குரு ஜோசப் லுார்துராஜா தலைமையில் அடிக்கல் நாட்டினர். 1.25 ஏக்கரில் ரூ.4.5 கோடியில் தெரசா சர்ச் பணிகள் முடிந்துள்ளன. கொல்கட்டாவில் இருந்து தெரசாவின் திருப்பண்டம் எடுத்து வந்து அர்ச்சிப்பு செய்துள்ளனர். ஒரே தேக்கு மரத்தில் செய்த சிலுவை சுமக்கும் இயேசு மர சொரூபம், கேரளாவில் இருந்து நற்கருணை பேழை, ஜெபமாலை வைத்துள்ளனர். கண்ணாடிகளால் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை வடிவமைத்து, ஆர்ச் கண்ணாடியில் 12 புனிதர்களின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளன. நாளை திறப்பு: வல்லனி பாதிரியார் எஸ். லுார்துராஜ் கூறியதாவது, புனிதர் பட்டம் பெற்ற பின், தெரசாவிற்கு முதன் முதலாக சர்ச் கட்டியுள்ளோம். நாளை மாலை 5:30க்கு மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி அர்ச்சிப்பு செய்ய, முன்னாள் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் எஸ்.சூசைமாணிக்கம் திறந்து வைக்கிறார், என்றார்.