உலகில் ஒரே மதம் சனாதன தர்மம்; மற்ற அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் மட்டுமே.. யோகி ஆதித்யநாத்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2023 12:10
கோரக்பூர்: உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது அது சனாதன தர்மம், மற்ற அனைத்தும் பிரிவுகள் மற்றும் வழிபாட்டு முறைகள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற ஏழு நாள் ஸ்ரீமத்பகவத் கதா ஞான யாகத்தின் நிறைவு கூட்டத்தில் அவர் பேசுகையில், "சனாதன தர்மம் மனிதகுலத்தின் மதம், அது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கு நெருக்கடி ஏற்படும்" என்று கூறினார். மஹந்த் திக்விஜய் நாத்தின் 54வது நினைவு தினம் மற்றும் மஹந்த் அவைத்யநாத்தின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த மஹந்த் திக்விஜய்நாத், நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும் போது தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் அரசியலில் மாற்றங்களையும், புதிதாக ஏதாவது செய்ய முயன்றார். ஒரு துறவிக்கு நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள் முன்னுரிமை. மஹந்த் திக்விஜய்நாத் ஜி அத்தகைய ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களுக்கு எதிராக போராடினார். உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது அது சனாதன தர்மம். மற்றவை அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் மட்டுமே ஆகும். சனாதனம் மனித குலத்தின் மதம், அது தாக்கப்பட்டால், உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி எற்படும். பகவத் கீதையின் கதைகள் முடிவில்லாதவை. அவற்றை படிக்க குறிப்பிட்ட நாட்களோ அல்லது பல நாட்களோ ஆகும். அதன் முக்கியத்துவத்தை பக்தர்கள் புரிந்து, தனது வாழ்க்கையில் செயல்படுவார்கள். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.