காஷ்மீர் சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை; சுதந்திரம் வாங்கிய பின் முதல் முறையாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2023 02:10
புது தில்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் சாரதா கோயிலில் 1947க்குப் பிறகு முதல்முறையாக நவராத்திரி பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் உள்ள தீட்வாலில் கட்டுப்பாடு கோடு பகுதி சாரதா கோயிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றது. பிரிவினைக்கு முந்தைய காலத்தில் கோயில் இருந்த அதே இடத்தில், அதே மாதிரியில்இந்த ஆண்டு மார்ச் 23 அன்று உள்துறை அமைச்சரால் கோயில் திறக்கப்பட்டது. காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சாரதா கோவிலில் 1947ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நவராத்திரி பூஜைகள் நடைபெறுவது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது; இது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் மோடி தலைமையில் நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சாரச் சுடர் மீண்டும் எழுவதைக் குறிக்கிறது. என்று கூறினார்.