காளியம்மன் கோயில் திருவிழா காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2023 03:10
காரியாபட்டி: காரியாபட்டி பஜார் பகுதியில் உள்ள மகாகாளியம்மன் கோயில், சக்தி காளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா அக். 10ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. குத்து விளக்கு பூஜை நடந்தது. பால்குடம் எடுத்து, பறவை காவடி, 6 முதல் 12 அடி அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.