மணிமுத்தாறில் ஐப்பசி முதல் தீர்த்தவாரி; பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2023 05:10
தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள கோயில்களில் உள்ள சுவாமிகள் ஐப்பசி முதல் நாள் முதல் தீர்த்தவாரியும், கடைசி நாள் கட முழுக்கு தீர்த்தவாரியும் கொடுப்பது வழக்கம். இன்று ஐப்பசி முதல் நாளை முன்னிட்டு அதிகாலையில் கைலாசவிநாயகர், மந்திரமூர்த்தி விநாயகர் மணிமுத்தாறில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தனர். மதியம் ஒரு மணியளவில் சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், கைலாசநாதர் , கோதண்டராமர், ரங்கநாத பெருமாள், கிருஷ்ணன், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் உட்பட சுவாமிகள் மணிமுத்தாறில் எழுந்தருளினர். சுவாமிகள் சார்பில் அசரத்தேவர், சக்கரத்தாழ்வாருக்கு ஆற்றில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அசரத்தேவர், சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பிரியாவிடையை தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியே சுவாமிகள் உலா வந்து அந்தந்த கோயில்களை அடைந்தனர். தீர்த்தவாரியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.