ரங்கா.. ரங்கா.. ; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் துர்கா ஸ்டாலின் மனமுருகி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2023 06:10
திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அப்போது துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐப்பசி மாதத்தில் சூரியன், துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். இன்று 18 ம் தேதி துலாம் மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இன்று ரங்கநாதரை தரிசனம் செய்ததால் சகல பாவமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்பு மிக்க ஐப்பசி முதல் நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ரங்கநாதரை தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு சுவாமி படம், பிரசாதம் வழங்கப்பட்டது.