Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெய்ப்பூரில் நவராத்திரி திருவிழா; ... செல்வம், நீண்ட ஆயுள் தரும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி; பக்தர்கள் பரவசம் செல்வம், நீண்ட ஆயுள் தரும் சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; கருமாரியாக அருள்பாலித்த அம்பாள்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் சக்தி கொலு; கருமாரியாக அருள்பாலித்த அம்பாள்

பதிவு செய்த நாள்

21 அக்
2023
11:10

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில்,சக்தி கொலு விழாவின் ஆறாம் நாளான நேற்று, கருமாரியம்மன் அலங்காரத்தில், அம்பாள் அருள்பாலித்தார். வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பாளுக்கு தினசரி, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்று, அம்பாள் கருமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, 108க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது. மேலும், தமிழக இசை கவின் பல்கலைக் கழக முதுகலை மாணவ, மாணவியரின் கர்நாடக இசைக் கச்சேரியும் நடந்தது. அதைத் தொடர்ந்து, டாக்டர் கணேஷின் நாம சங்கீர்த்தனம் நடந்தது.

வாகனங்களால் அவதி; முகூர்த்த நாளை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்தவர்களின் வாகனங்கள், மாடவீதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு வழியின்றி தவித்தனர். சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் இக்கோவிலில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கும். இந்நிலையில், கோவில் மாடவீதிகளில் வீடுகளை திருமண மண்டபங்களாக பலர் மாற்றியுள்ளனர். அங்கும் திருமணங்கள் நடக்கும். திருமணத்திற்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாடவீதிகள், குளக்கரைகளை சுற்றி நிறுத்தி விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்படும் பகுதி மக்கள் கூறியதாவது: வடபழனி ஆண்டவர் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு முகூர்த்த நாள் என்றால் அலர்ஜி தான். கோவில், மாடவீதிகளில் உள்ள மண்டபங்களில் திருமணம் நடத்துபவர்கள், தங்களின் வாகனங்களை இஷ்டத்திற்கு காலி இடத்தில் விட்டுச் செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் தங்களின் வாகனங்களை வீட்டில் இருந்து வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வயதான முதியவர்கள் உடல் நிலை பாதித்தால், ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியவில்லை. அவர்களை கட்டிலில் வைத்து துாக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை தான் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல் துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை இணைந்து ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar