பதிவு செய்த நாள்
21
அக்
2023
01:10
திசையன்விளை: திசையன்விளை சாய்பாபா கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. திசையன்விளை, செல்வமருதூரில், சண்முகநாத சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயில் முதலாவது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவில் காலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, சங்குபூஜை, கும்பபூஜை, கணபதி, சுதர்ஷன, மகாலட்சுமி, மூலமந்திர, ஹோமங்கள், சாய்பாபாவிற்கு 108 சங்காபிஷேகம், ஆலய கும்பாபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம், மதிய ஆரத்தி பூஜை, அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அறம் வளர்த்தநாதன், மகாலட்சுமி தலைமை வகித்தனர். ஏற்பாடுகளை உயர்நீதிமன்ற வக்கீல் இசக்கியப்பன், ஆசிரியர் சுப்பிரமணியன் செய்திருந்தனர்.