மேட்டுப்பாளையம்: சத்ய சாய் சமிதி கோவிலில், நவராத்திரி உற்சவம் விழாவை முன்னிட்டு, விளக்கு பூஜை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டையிலும், கோ -ஆப்ரேட்டிவ் காலனியிலும், சத்ய சாய் சமிதி கோவில்கள் உள்ளன. இரண்டு கோவில் நிர்வாகத்தினர் இணைந்து, நவராத்திரி உற்சவ விழா மற்றும் சத்ய சாய்பாபா அவதார தினத்தை முன்னிட்டு, அன்னபூரணி பேட்டை சத்ய சாய் சமிதி கோவிலில், விளக்கு பூஜை நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.