அன்னூர்: அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது.
அன்னூரில், ஓதிமலை சாலையில், 400 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை திருவிழா மற்றும் ராம நவமி விழாக்கள் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது, கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்ததால் தற்போது கோவிலின் முன் நுழைவாயில், மண்டபம், தரைத்தளம் கட்டுதல், முழுமையாக வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. டிச. 16ம் தேதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, பணிகள் வேகம் அடைந்துள்ளன. இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், பழமையான இக்கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் உதவ வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.