திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ; பந்தக்கால் முகூர்த்தம் தீடீர் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2023 03:10
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பந்தக்கால் முகூர்த்தம் தீடீர் என்று ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிசன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனிஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பலர் சனி பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். சனி பகவான் வரும் (20.12,2023) புதன்கிழமை மாலை.5.20மணிக்கு மகரராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் சனிப்பெயர்ச்சிவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக பந்தக்கால் முகூர்த்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு சரியாக அழைப்பு இல்லை. ஐந்து முக்கிய கிராம வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தால் தீடீர் என்று பந்தக்கால் முகூர்த்தத்தை கோவில் நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. மேலும் சனிப்பெயர்ச்சி பந்தக்கால் முகூர்த்தம் மாற்று தேதியில் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.