பதிவு செய்த நாள்
28
அக்
2023
10:10
சென்னை: ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் ஜனவரி 22ல், நாடெங்கும் ஊர்வலம், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், 2024 ஜனவரி 22-ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை நாடெங்கும் கொண்டாட, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. ஜனவரி 22ம் தேதி கிராமங்கள், நகரங்களில், ராமர் படங்களுடன் ஊர்வலம், பஜனை, சிறப்பு வழிபாடு, அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளில், பொது மக்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அறிவுறுத்தியுள்ளது.