சபரிமலையில் மண்டல கால தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2023 05:10
சபரிமலை; சபரிமலையில் வரும் 17ல் தொடங்க உள்ள மண்டல காலத்துக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. எனினும் டிச.,26, 27 மற்றும் மகர விளக்கு சீசனுக்கான முன்பதிவு பின்னர் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின்னர் சபரிமலையில் தரிசனம் அனைத்தும் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் வரும் 17 அதிகாலை தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை 16 மாலை திறக்கப்படும். 41 நாட்கள் பூஜை நடக்கும் இந்த கால அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. எல்லா நாட்களிலும் அதிகாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை16 ஸ்லாட்டுகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தங்க அங்கி வருகை தரும் டிச.,26 மற்றும் மண்டல பூஜை நடைபெறும் டிச.,27 தேதிகளுக்கும், மகர விளக்கு சீசனுக்கும் முன்பதிவு தொடங்கவில்லை. இந்த தேதிகளுக்கான முன்பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக வரும் பத்தாம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 11-ல் மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜாவின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடைஅடைக்கப்படும்.