ஐப்பசி செவ்வாய்; கோவை பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2023 03:10
கோவை; கோவை, ராம் நகர், பட்டேல் ரோடு பால தண்டாயுதபாணி, மகா கணபதி, துர்க்கை அம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பால தண்டாயுதபாணி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.