பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த கோயில் கிஷன்கங்கா நதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இந்தியாவை பிரித்தவுடன் மக்கள் அனைவரையும் அங்கிருந்து ஜம்முவிலிருக்கும் பன்டாலாப் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்தனர். அனைவரும் பாகிஸ்தானிலிருக்கும் கோயிலை போன்று ஒரு கோயில் எழுப்பினர். சாரதா தேவியாக இங்கு வீற்றிருப்பது அன்னை சரஸ்வதி. அந்த நேரத்திலிருந்து, காஷ்மீரை சாரதாபீடம் என்று அழைக்கப்பட்டது.