தெய்வத்தன்மை பொருந்திய அம்பாளான, தாயார் மகாரஜ்னி இங்கு மூலவராக அருள்கிறாள். இந்த தலம் இராமாயணத்துடன் தொடர்புடையது. இங்குள்ள நீர்வீழ்ச்சியின் நிறம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாறும். புனித ஆத்மாவான சுவாமி விவேகானந்தர் இந்த புனித இடத்தை தரிச்சித்திருக்கிறார். மிக முக்கியமான திருவிழாவான ஜேஷ்டாஷ்டமியின் போது சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிதர்கள் இந்த புனித தலத்திற்கு வருகை தந்து தங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள்.