ரன்பிர்ரேஷ்வரர் கோயில் ஜம்முவில் மற்றொரு நன்கு அறிந்த ஒரு சிவன் கோயிலாகும். ரன்பிர்ரேஷ்வரர் கோயிலுக்கென்று ஒரு தனி புராணம், அதன் பக்தர்கள் மற்றும் முக்கியமான நாட்களில் வழிபாடுகள் இருக்கிறது. இந்த பிரபலமான கோயில் ஜம்மு காஷ்மீரின் ஜம்முவின் ஷாலாமர் ரோட்டின் அருகில் அமைந்துள்ளது. ரன்பிர்ரேஷ்வரர் கோயிலில் பன்னிரண்டு சிவ லிங்கங்கள் 12 இன்ச் முதல் 18 இன்ச் அளவுகளில் பளிங்கினால் ஆனது. மற்றும் ஆயிரக்கணக்கான சாளிக்கிராமத்தினால் ஆன சிலைகள் கல்லில் பொருத்திவைக்கப்பட்டுள்ளது.