இந்தியாவில் இருந்து ஒரு பெரிய இயந்திரத்தை அமெரிக்கா வாங்கியது. ஒரு மாதம் கழித்து இந்திய நிறுவனத்திற்கு மெயில் வந்தது. உங்களிடம் வாங்கிய இயந்திரம் பழுதாகி விட்டது. அதை சரி செய்ய விபரம் தெரிந்தவரை அனுப்பவும் என அமெரிக்க நிறுவனம் செய்தி அனுப்பியது. இந்தியாவில் இருந்து ஒருவர் அங்கு சென்றார். அவரை பார்த்த அந்த நிறுவனம் மீண்டும் விஷயம் தெரிந்த அனுபவமானவரை அனுப்பவும் எதிர்பார்க்கிறோம் என அனுப்பி இருந்தது. அதற்கான பதிலை பார்த்து ஆச்சரியப்பட்டது அமெரிக்க நிறுவனம். அப்படி என்ன பதில் இருந்தது. அதில்... அந்த எந்திரத்தை கண்டுபிடித்தவரே அவர் தான். அவரை வைத்து பழுது பாருங்கள் என எழுதப்பட்டிருந்தது. யாரையும் அலட்சியமாக எடை போடாதீர்கள். ஒவ்வொருக்கும் தனித்தனி திறமை உண்டு என்பதை மறவாதீர்.