காளஹஸ்தி சிவன் கோயிலில் கேதார கௌரி விரதம்; வரும் 13ம் தேதி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2023 04:11
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி கோயில் வளாகத்தில் கேதார கௌரி விரதம் நடைபெற உள்ளதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் கேதார கௌரி விரதம் இம்மாதம் 13ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அமாவாசை திங்கள்கிழமை வருவதால் காளஹஸ்தி கோயிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் கேதார கௌரி விரதப் பூஜை திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6மணி வரை நடைபெறும். கௌரி (உற்சவ மூர்த்தி) அம்மன் காலை ஏழு மணிக்கு மண்டபத்தில் எழுந்தருள, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பூஜை நடைபெறும். இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் தாம்பூலம் வழங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி அன்று அமாவாசை ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள்கிழமை மதியம் வரை இருப்பதால், திங்கள்கிழமை காலை கௌரி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோயில் வேத பண்டிதர் அர்த்தகிரி தெரிவித்தார்.