Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை 1; வீட்டில் ... கார்த்திகை சதுர்த்தி; விநாயக பெருமானுக்கு 108 தேங்காய் அபிஷேகம் கார்த்திகை சதுர்த்தி; விநாயக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி; சங்கொலி முழங்க பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி; சங்கொலி முழங்க பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 நவ
2023
10:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம் கூறுகிறது. அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார். அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரியில் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம் ஆகியவை ஊற்றி  அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ., சுற்றளவு கொண்டது. இதை சுற்றி, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; 32 அடி உயர வெள்ளி ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் மாட வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 
temple news
தாண்டிக்குடி; திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கோயில் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சேற்றாண்டி வேடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar