Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ... தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. சாட்டை ஏந்திய சாஸ்தா தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. சாட்டை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. கதாயுதம் ஏந்திய சாஸ்தா
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா; இன்று.. கதாயுதம் ஏந்திய சாஸ்தா

பதிவு செய்த நாள்

22 நவ
2023
11:11

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ கோயில் உள்ளது. இங்கு கதாயுதம் ஏந்தியபடி காட்சி தருகிறார். முன்னொரு காலத்தில் சுசீந்திரம் ஞானாரண்யம் என்ற பெயரில் காடாக இருந்தது. இந்த காட்டில் அத்திரி மகரிஷி தன் மனைவி அனுசூயாவுடன் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். இதனால் இத்தலம் ஆஸ்ரமம் என அழைக்கப்பட்டு, ‘ஆஸ்ராமம்’ என மருவியது.

இங்கு சாஸ்தா பீடத்தில் அமர்ந்து வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணுாலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இவருக்கு ஏன் ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என பெயர் வந்தது தெரியுமா... பல ஆண்டுக்கு முன் கண் தெரியாத அந்தணர் ஒருவர் சாஸ்தாவை வழிபட்டார். ஒருநாள் தாமதமானதால் இரவில் தங்கினார்.  அப்போது அவரது கண்களில் யாரோ மை தீட்டுவது போல் தெரிந்ததும் திடுக்கிட்டு விழித்தார். உடனே பார்வை வந்து விட்டது. மகிழ்ச்சியில் அவர் ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என கத்தினார். (அஞ்சனம் – மை, எழுதிய – தீட்டிய) நாளடைவில் மருவி அஞ்சனம் எழுதியது கண்டன் சாஸ்தா என மாறிவிட்டது. அன்று முதல் ‘கண்ணில் மை தீட்டிய கடவுள்’ என இவரை வழிபடுகின்றனர். இவரை வழிபட்டால் கண் பார்வை சரியாகும்.

எப்படி செல்வது: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 4 கி.மீ.,
நேரம்: காலை 7:30 – 8:30 மணி, மாலை 5:00 – 6:00 மணி
தொடர்புக்கு: 99942 49448, 94434 94473

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டலகாலம் என்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar