புதுச்சேரி உழந்தை கீரப்பாளையம் கோயிலில் சாட்டை ஏந்திய நிலையில் திருமணக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார். 300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் தாமரை ஏந்தியபடி பூர்ணாதேவியும், அல்லி மலரை ஏந்தியபடி புஷ்கலா தேவியும் அய்யனாருடன் உடனிருக்கின்றனர். மகாமண்டபத்தில் அய்யனாரின் புராண வரலாறு சுதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இது தவிர கயிலைநாதரான சிவபெருமான், கிருஷ்ணர், மகாவிஷ்ணுவின் தசாவதார கோலமும் சுதை சிற்பங்களும் உள்ளன. ஆண்டுதோறும் சித்திரை மூன்றாம் திங்கட்கிழமையன்று சிறப்பு அபிஷேகம், ஊரணி பொங்கல் வைபவம் இங்கு நடக்கும். இரவு அலங்காரத்துடன் வீதியுலா எழுந்தருள்வார்.
புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., துாரத்திலுள்ள 100 அடி ரோடு, R.T.O. ஆபீஸ் அருகில், உழந்தை கீரப்பாளையத்தில் கோயில் உள்ளது. நேரம்: காலை 6:30 - 10:00 மணி; மாலை: 5:30 - 9:00 மணி தொடர்புக்கு: 99445 40578, 93426 49858