பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட காரிய தடை, கடன் தொல்லை நீங்கும்.. வேண்டியது கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2023 12:11
இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், சில நல்நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தி, சஷ்டி, செவ்வாய், வெள்ளி, காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன் மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. பிரதோஷ தினமான இன்று நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பாகும். மாலை லட்சுமி நரசிம்மருக்கு வீட்டில் சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபட காரிய தடை, கடன் தொல்லை நீங்கி சுகம் பெறலாம்.