வெற்றிலை மாலை, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த அனுமன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2023 03:11
கோவை; ராம் நகர், முத்துமாரியம்மன் கோவிலில் இருக்கும் சிவ பக்த ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் வெற்றிலை மாலையுடன் ராஜ அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.