இலங்கை அசோகவனத்தில் சீதா அமர்ந்திருந்த கல்; அயோத்தி ராமர் கோவிலில் வைக்க ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2023 08:11
லக்னோ: இலங்கையில் அசோகவனத்தில் சீதா அமர்ந்திருந்த கல் அயோத்தி ராமர் கோவிலில் வைப்பதற்காக அரசு மரியாதையுடன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் (வாடிகா) சீதா அமர்ந்திருந்த கல் இலங்கை அர்ச்சகர்கள், புத்த பிக்ஷுக்கள் மற்றும் இலங்கை அரசு அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் முழு மரியாதையுடன் அயோத்திக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டது. அயோத்தி விமான நிலையத்தில்,இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாரம்பரிய இசை வாசிக்கும் இசைக்குழுவினரின் இசையோடு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.