பதிவு செய்த நாள்
04
டிச
2023
12:12
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2024ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு, நேற்று துவங்கியது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தினந்தோறும் சுவாமிக்கு வடைமாலை சாத்தப்படும். பின் சிறப்பு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவிக்கப்படும். இதற்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் முன்பதிவு செய்வது வழக்கம். இதன்படி, 2024ம் ஆண்டுக்கான முன்பதிவு, கோவில் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. ஒரு கட்டளைதாரர், 6,000 ரூபாய் செலுத்தி, தாங்கள் விரும்பிய நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த நாளில் குடும்பத்தினருடன் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். ஐந்து கட்டளைதாரர் இணைந்து இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று, 250 பேர், 6,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்தனர்.